Tuesday, March 22, 2011

கொங்க புலவனார்கள் (சேரகுல உபாத்திகள்)

கொங்கதேச தமிழ் சங்கம்





கொங்கு மண்டல சதக பாடல் 
 கொங்குப் புலவர் சபை
31.

வளவ னெழுத்துப் படிக்கம்பர்க் கான வதுவைவரி
தெளியும் பழந்தமி ழைவாணர் கொள்ளச் செயு முரிமை
கொளவேற் றவர்தமைத் தேர்ந்தெடுக் குஞ்சபை கூடிவரு
வளமை மிகுதிருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) குலோத்துங்க சோழன் சாசனப்படிக்குண்டான,
கலியாண வரியை, ஐந்து பிரிவினையுடைய புலவர் வகுப்பினரில் தகுதி
வாய்ந்தவர்கள் இவர்களென்று பொறுக்கி எடுத்து உரிமை தரும், கொங்குப்
புலவர் சங்கங்கூடுந் திருச்செங்கோடு கொங்கு மண்டலம் என்பதாம்.

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=30


படிக்காசு சபை நடக்குமிடம்: http://www.arthanareeswarar.com/Tamil/Images/stepsTravel11.jpg


கொங்கதேசத்தின் பூர்வ குடிகளில் ஒன்று புலவனார் எனப்படுபவர்கள். இவர்கள் தமிழ் பாடுதல், நல்லன தீயன எடுத்துரைத்தல், இடித்துரைத்தல், பள்ளிக்கூடங்கள் நடத்தி மாணவர்களுக்கு எழுத்தறிவித்தல் ஆகிய அரும்பெரும் பணிகளை செய்துவந்துள்ளனர். இவர்களைப்பற்றி கொங்கு மண்டல சதகம், கம்பர் வதுவைவரி பட்டயம், கொங்கு புலவர் பட்டயம், குறுப்பு நாட்டுப் புலவர் பட்டயம், சென்னிமலைப் புலவர் பட்டயம், திருக்கைவேல் புலவர் பட்டயம், பொருளந்தை கோத்திரப் புலவர் பட்டயம் ஆகியவை கூறுகின்றன. ஆகியவற்றில் காணலாம். புலவனார்களுக்காகவே புலவன்பாளையம், புலவன்வலசு, புலவனூர் என்று ஊர்களையும் அவர்களுக்குக் பூமி, வீடு, கோயில் விஷேஷங்களைக் கொங்கர் செய்து வந்துள்ளனர். இது சங்ககாலத்துக்கு முன்னரே துவங்கிவிட்டு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை நடந்து வந்த நடைமுறை. “புலவன் வாக்கு பொய்க்காது என்று போற்றப்படுகின்றனர்.கொங்கர் கல்யாணங்களில் வாழ்த்துப்பாடி, ஏரெழுபது படிப்பர். அதற்காக பால்பழம், பரிசில் பெற்றால் அத்திருமணம் என்றும் நிலைக்கும் என்பது ஐதீகம். புலவனார் வீட்டில் விஷேஷமாயின் அவற்றை வெள்ளாளரே முன்னின்று நடத்தி வந்துள்ளனர்.  பட்டன், புலவன், பண்பாடி, தக்கைகொட்டி, கூத்தாடி என்ற ஐவாணர்களுக்குள் புலவர்கள் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள். வெள்ளாளர்களுக்கு ஏட்டுக்கல்வியளிப்பது, எடுத்துரைப்பது, இடித்துரைத்து நல்வழிப்படுத்துவது ஆகியன புலவனார்கள் செய்துவந்த அரும்பெரும் கடமைகள். 


இழிந்த குடும்பத்தினர் பெருஞ்செல்வந்தராயிருப்புனும் புலவர் அக்குடும்பங்களிடம் செல்ல மாட்டார்கள். இழிசெயல் நடந்துவிட்டால் “எங்கள் வீட்டுக்குப் புலவன் வந்து பால்பழம் குடிக்கலைன்னா போவுது” என்று முதியோர்கள் சொல்வதனை இன்றும் கேட்கலாம். இவ்வரிய கொடுப்பிணை நமது கொங்க வெள்ளாளர்களுக்கு மட்டுமே உண்டேயொழிய வேறு யாருக்கும் இல்லை.வித்தியாரம்பம், கல்யாணம், விஷேஷங்கள் ஆகியவற்றில் புலவர் வம்சத்தவர் வாழ்த்துப்பெறுவது வரம்பெறுவது போலாகும். மழகொங்கத்தில் (பழைய அகண்ட சேலம் ஜில்லாவில்) இன்றும் சில ஊர்களில் கல்யாணம் என்றால் புலவனாருக்குப் படிக்காசு எடுத்துவைத்தால்தான் கல்யாணம் முடிந்ததாக மங்கலவாழ்த்தில் உள்ளதனைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்,

நமது தேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடத்தார் வீடு என்று ஒருவர் வீட்டு திண்ணையில் புலவனார் சாதியினர் பள்ளிக்கூடம் போடுவார். 


http://ta.wikipedia.org/wiki/திண்ணைப்_பள்ளிக்கூடம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxTuGxCWyjqAOp-_cVxGd71gmkDw10e_jIRgyLcCLwicQz0YAb1xidLvkZua1iaEM6rP-bEKO4nJcGmx8cu_pWwhXBKzqkJqbhwC_x3bWOYcNjgU8FOFpTowdGt5uFgwSFZ0pilIqAWY4n/s1600/7998_417625508351407_911614131_n.jpg 

அதில் 18 குடி சிறுவர், சிறுமியரும் பயின்றனர் பள்ளியில் வைக்க குழந்தையானது காணிக்கை கொடுக்க, காணி உபாத்தியாயப் புலவனார் (வாத்தியார்) அதற்க்கு நாட்டுப்பசும்பாலில் எழுத்தாணி கொண்டு மந்திரம் எழுதிப் பள்ளியில் வைப்பார். இதற்க்கு 'எழுத்தாணிப்பால்' அல்லது 'வித்தியாரம்பம்' என்று பெயர். வித்தியாரம்பம் காணிப்புலவனாரே செய்து வைக்க வேண்டும். 'எழுத்தறிவித்தவன் இறைவன்' ஆதலால்  இன்று எழுத்தறிவு 'விற்பவர்களுக்கு' இத்தகுதியில்லை.

திருச்செங்கோட்டில் சேரர்கொங்கதேசத்தின் புலவனார் தமிழ்ச்சங்கம் இன்றும் உள்ளது. இன்றும் வைகாசி விழவின் நாளாம் நாள் புலவனார்கள் சங்கப்பலகை பல்லாயிர வருட பாரம்பரியப்படி நடந்து வருகிறது.

ஜாதிப்பட்டியலில் கொங்க புலவனார்கள் (சேரகுல உபாத்திகள்) சேர்க்கப்படாமல் செங்குந்த முதலியாரில் சேர்த்துள்ளது சர்க்காரின் சமூக அழிப்பு வேலையின் ஒரு பகுதி.

நமது கொங்க தேசத்தின் கல்வியறிவு வெள்ளையர் வருகையில் 85% இருந்துள்ளது. வெள்ளாளர் முதல் பறையர் வரை அனைவரும் படித்திருந்துள்ளனர். பிராமணர்கள் வேதம் சாஸ்திரம் மட்டுமே மனப்பாடம் செய்ததால் அவர்களுக்குக் கல்வியறிவு குறைவாகவே இருந்ததாக இம்முறைகளை அழித்த வெள்ளையர்களே ஸென்ஸஸில் குறிப்பிட்டுள்ளனர். 

கொங்க தேசத்தில் கல்வியறிவு தென் பாரதத்திலேயே மிக உயர்வாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். தரம்பால், தனது Beautiful Tree புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஒவ்வொரு ஊரிலும் அனைத்து சாதியினருக்கும் உண்மையான, வாழ்க்கைக்கு உதவக்கூடிய கல்வி அளித்தன. இன்றும் ஒவ்வொரு ஊரிலும் இக்கல்விச்சாலைகள் நடந்த வீடுகள் "பள்ளிக்கூடத்தார் வீடு" என்று அழைக்கப்ப்டுவதனைக் காணலாம். 

மேற்கல்வி குருகுலத்தில் அளிக்கப்பட்டது. பௌதீகம், ரசாயனம், மருத்துவம் போன்ற பண்முகக் கல்வி முறையை இங்கிருந்தே கற்றதாக ஆங்கிலேயர் குறிப்பிடுகின்றனர்.


Download: http://www.samanvaya.com/dharampal/frames/downloads/3beautiful-tree.zip


கல்யாணங்களில் கேவலமான பாடல்களைப் பாடும் ஆர்கெஸ்டாகளைத் தவிர்த்து, முறைப்படி புலவர்களுக்குப் பால் பழம் வைத்துக் காணிக்கை மரியாதைகள் செய்து வாழ்த்துப் பெற வேண்டியது முறை. ஏனெனில் "புலவன் வாக்கு பொய்க்காது" என்பது முதுமொழி.

இதுதான் உண்மையான தமிழ் வழி! சங்கத்தமிழ் புலவர்கள் இவர்களே. மற்றவை போலி.

இக்கட்டுரை ஆசிரியரைத் தொடர்புகொள்ள:  - 9442353708

4 comments:

  1. ஸ்மார்த்த சைவ‌ மரபு‌‌ உடையவர்கள் சேர் குல‌ உபாத்தியாயர்கள்‌‌

    ReplyDelete
  2. பஞ்ஜாதயன‌‌பூஜை‌ ஆதிசங்கரர் ‌‌‌‌வழி சிருங்கேரி சாரதா பீடம் வழி குல குருக்கள் பின்பற்றுகின்றனர்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. சேர‌குல‌வேளாளர் என்ற கொங்க‌புலவர்களுக்கு
    கவுண்டன் பிராமண பிள்ளை ‌‌‌‌‌‌என்ற‌ பெயர் உண்டு.இவர்கள் சீர்கருணீகர் என்ற‌ குலத்தை சேர்ந்தவர்கள்.சைவபிள்ளைகான‌ இந்த குலத்தின் மரபு கருணீக புராணம் என்னும் ‌‌‌புராணம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இவர்களுக்கு உரியது.கோவில் கணக்காளர்கள் ‌, எழுத்தாளர்கள் ஆகிய ‌‌‌‌‌‌‌பணிகளை கையாண்டு வந்தனர்‌.சித்திர குப்தரே இவர்களுக்கு ‌‌‌‌‌‌ஆதி‌தெய்வம்.இவர்கள் உடைய வேதம் சாம வேதம்

    ReplyDelete