Tuesday, March 22, 2011

கொங்க புலவனார்கள் (சேரகுல உபாத்திகள்)

கொங்கதேச தமிழ் சங்கம்





கொங்கு மண்டல சதக பாடல் 
 கொங்குப் புலவர் சபை
31.

வளவ னெழுத்துப் படிக்கம்பர்க் கான வதுவைவரி
தெளியும் பழந்தமி ழைவாணர் கொள்ளச் செயு முரிமை
கொளவேற் றவர்தமைத் தேர்ந்தெடுக் குஞ்சபை கூடிவரு
வளமை மிகுதிருச் செங்கோடை யுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) குலோத்துங்க சோழன் சாசனப்படிக்குண்டான,
கலியாண வரியை, ஐந்து பிரிவினையுடைய புலவர் வகுப்பினரில் தகுதி
வாய்ந்தவர்கள் இவர்களென்று பொறுக்கி எடுத்து உரிமை தரும், கொங்குப்
புலவர் சங்கங்கூடுந் திருச்செங்கோடு கொங்கு மண்டலம் என்பதாம்.

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=30


படிக்காசு சபை நடக்குமிடம்: http://www.arthanareeswarar.com/Tamil/Images/stepsTravel11.jpg


கொங்கதேசத்தின் பூர்வ குடிகளில் ஒன்று புலவனார் எனப்படுபவர்கள். இவர்கள் தமிழ் பாடுதல், நல்லன தீயன எடுத்துரைத்தல், இடித்துரைத்தல், பள்ளிக்கூடங்கள் நடத்தி மாணவர்களுக்கு எழுத்தறிவித்தல் ஆகிய அரும்பெரும் பணிகளை செய்துவந்துள்ளனர். இவர்களைப்பற்றி கொங்கு மண்டல சதகம், கம்பர் வதுவைவரி பட்டயம், கொங்கு புலவர் பட்டயம், குறுப்பு நாட்டுப் புலவர் பட்டயம், சென்னிமலைப் புலவர் பட்டயம், திருக்கைவேல் புலவர் பட்டயம், பொருளந்தை கோத்திரப் புலவர் பட்டயம் ஆகியவை கூறுகின்றன. ஆகியவற்றில் காணலாம். புலவனார்களுக்காகவே புலவன்பாளையம், புலவன்வலசு, புலவனூர் என்று ஊர்களையும் அவர்களுக்குக் பூமி, வீடு, கோயில் விஷேஷங்களைக் கொங்கர் செய்து வந்துள்ளனர். இது சங்ககாலத்துக்கு முன்னரே துவங்கிவிட்டு ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்வரை நடந்து வந்த நடைமுறை. “புலவன் வாக்கு பொய்க்காது என்று போற்றப்படுகின்றனர்.கொங்கர் கல்யாணங்களில் வாழ்த்துப்பாடி, ஏரெழுபது படிப்பர். அதற்காக பால்பழம், பரிசில் பெற்றால் அத்திருமணம் என்றும் நிலைக்கும் என்பது ஐதீகம். புலவனார் வீட்டில் விஷேஷமாயின் அவற்றை வெள்ளாளரே முன்னின்று நடத்தி வந்துள்ளனர்.  பட்டன், புலவன், பண்பாடி, தக்கைகொட்டி, கூத்தாடி என்ற ஐவாணர்களுக்குள் புலவர்கள் மிக நெருங்கிய தொடர்புடையவர்கள். வெள்ளாளர்களுக்கு ஏட்டுக்கல்வியளிப்பது, எடுத்துரைப்பது, இடித்துரைத்து நல்வழிப்படுத்துவது ஆகியன புலவனார்கள் செய்துவந்த அரும்பெரும் கடமைகள். 


இழிந்த குடும்பத்தினர் பெருஞ்செல்வந்தராயிருப்புனும் புலவர் அக்குடும்பங்களிடம் செல்ல மாட்டார்கள். இழிசெயல் நடந்துவிட்டால் “எங்கள் வீட்டுக்குப் புலவன் வந்து பால்பழம் குடிக்கலைன்னா போவுது” என்று முதியோர்கள் சொல்வதனை இன்றும் கேட்கலாம். இவ்வரிய கொடுப்பிணை நமது கொங்க வெள்ளாளர்களுக்கு மட்டுமே உண்டேயொழிய வேறு யாருக்கும் இல்லை.வித்தியாரம்பம், கல்யாணம், விஷேஷங்கள் ஆகியவற்றில் புலவர் வம்சத்தவர் வாழ்த்துப்பெறுவது வரம்பெறுவது போலாகும். மழகொங்கத்தில் (பழைய அகண்ட சேலம் ஜில்லாவில்) இன்றும் சில ஊர்களில் கல்யாணம் என்றால் புலவனாருக்குப் படிக்காசு எடுத்துவைத்தால்தான் கல்யாணம் முடிந்ததாக மங்கலவாழ்த்தில் உள்ளதனைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர்,

நமது தேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடத்தார் வீடு என்று ஒருவர் வீட்டு திண்ணையில் புலவனார் சாதியினர் பள்ளிக்கூடம் போடுவார். 


http://ta.wikipedia.org/wiki/திண்ணைப்_பள்ளிக்கூடம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxTuGxCWyjqAOp-_cVxGd71gmkDw10e_jIRgyLcCLwicQz0YAb1xidLvkZua1iaEM6rP-bEKO4nJcGmx8cu_pWwhXBKzqkJqbhwC_x3bWOYcNjgU8FOFpTowdGt5uFgwSFZ0pilIqAWY4n/s1600/7998_417625508351407_911614131_n.jpg 

அதில் 18 குடி சிறுவர், சிறுமியரும் பயின்றனர் பள்ளியில் வைக்க குழந்தையானது காணிக்கை கொடுக்க, காணி உபாத்தியாயப் புலவனார் (வாத்தியார்) அதற்க்கு நாட்டுப்பசும்பாலில் எழுத்தாணி கொண்டு மந்திரம் எழுதிப் பள்ளியில் வைப்பார். இதற்க்கு 'எழுத்தாணிப்பால்' அல்லது 'வித்தியாரம்பம்' என்று பெயர். வித்தியாரம்பம் காணிப்புலவனாரே செய்து வைக்க வேண்டும். 'எழுத்தறிவித்தவன் இறைவன்' ஆதலால்  இன்று எழுத்தறிவு 'விற்பவர்களுக்கு' இத்தகுதியில்லை.

திருச்செங்கோட்டில் சேரர்கொங்கதேசத்தின் புலவனார் தமிழ்ச்சங்கம் இன்றும் உள்ளது. இன்றும் வைகாசி விழவின் நாளாம் நாள் புலவனார்கள் சங்கப்பலகை பல்லாயிர வருட பாரம்பரியப்படி நடந்து வருகிறது.

ஜாதிப்பட்டியலில் கொங்க புலவனார்கள் (சேரகுல உபாத்திகள்) சேர்க்கப்படாமல் செங்குந்த முதலியாரில் சேர்த்துள்ளது சர்க்காரின் சமூக அழிப்பு வேலையின் ஒரு பகுதி.

நமது கொங்க தேசத்தின் கல்வியறிவு வெள்ளையர் வருகையில் 85% இருந்துள்ளது. வெள்ளாளர் முதல் பறையர் வரை அனைவரும் படித்திருந்துள்ளனர். பிராமணர்கள் வேதம் சாஸ்திரம் மட்டுமே மனப்பாடம் செய்ததால் அவர்களுக்குக் கல்வியறிவு குறைவாகவே இருந்ததாக இம்முறைகளை அழித்த வெள்ளையர்களே ஸென்ஸஸில் குறிப்பிட்டுள்ளனர். 

கொங்க தேசத்தில் கல்வியறிவு தென் பாரதத்திலேயே மிக உயர்வாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். தரம்பால், தனது Beautiful Tree புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். திண்ணைப் பள்ளிக்கூடங்கள் ஒவ்வொரு ஊரிலும் அனைத்து சாதியினருக்கும் உண்மையான, வாழ்க்கைக்கு உதவக்கூடிய கல்வி அளித்தன. இன்றும் ஒவ்வொரு ஊரிலும் இக்கல்விச்சாலைகள் நடந்த வீடுகள் "பள்ளிக்கூடத்தார் வீடு" என்று அழைக்கப்ப்டுவதனைக் காணலாம். 

மேற்கல்வி குருகுலத்தில் அளிக்கப்பட்டது. பௌதீகம், ரசாயனம், மருத்துவம் போன்ற பண்முகக் கல்வி முறையை இங்கிருந்தே கற்றதாக ஆங்கிலேயர் குறிப்பிடுகின்றனர்.


Download: http://www.samanvaya.com/dharampal/frames/downloads/3beautiful-tree.zip


கல்யாணங்களில் கேவலமான பாடல்களைப் பாடும் ஆர்கெஸ்டாகளைத் தவிர்த்து, முறைப்படி புலவர்களுக்குப் பால் பழம் வைத்துக் காணிக்கை மரியாதைகள் செய்து வாழ்த்துப் பெற வேண்டியது முறை. ஏனெனில் "புலவன் வாக்கு பொய்க்காது" என்பது முதுமொழி.

இதுதான் உண்மையான தமிழ் வழி! சங்கத்தமிழ் புலவர்கள் இவர்களே. மற்றவை போலி.

இக்கட்டுரை ஆசிரியரைத் தொடர்புகொள்ள:  - 9442353708

1. பூந்துறை நாட்டுப் புலவனார்கள்:

பூந்துறை நாட்டுப் புலவனார்கள்:

A. மேல்கரை பூந்துறை நாட்டுப் புலவர்கள்: 
1. பூந்துறை நாட்டுப்புலவர்கள்:
பூந்துறைப் புலவனார்கள் சின்னையகவுண்டன்வலசில் உள்ளனர். பூந்துறை சாகாடை கோத்திரத்தார் என்ற புலவனார் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். வாரிசு தாமோதரப் புலவனார். 

தாமோதரப்புலவனார்
கொங்கதேச சேரகுல உபாத்திப் புலவனார்களின் பெரியவீட்டுக்காரர். 
செல்: 9994992126

2. வெள்ளோடு நாட்டுப்புலவனார்கள்:
கொங்கு புலவர் பட்டயம் இவ்வாறு கூறுகிறது: "பூந்துறை நாடு, காங்கய நாடு, குறுப்பு நாடு யிந்த மூன்று நாட்டுக்கும்" போக்கங்கூட்டம் எனும் புலவர் கோத்திரத்துள் நஞ்சராயப் புலவனார் என்கிறது.
பூந்துறைநாட்டில் பல ஊர்கள் புலவனார்கள் பெயரில் இருப்பினும், இரண்டு ஊர்களே முதன்மையானவை. அவை பூந்துறை சின்னையகவுண்டன் வலசு மற்றும் வெள்ளோடு புலவன்பாளையம் ஆகியன. இது மட்டுமல்லாது புலவனூரென்று ஈங்கூரருகில் ஒர் ஊரும் உள்ளது.
பூந்துறைநாட்டுப்புலவர்கள் முதலில் வடகரை நாட்டில் (பாவானிதாலுகா ஜம்பை) வாழ்ந்து வந்தனர். பின்னர் வெள்ளாளர்களால் சத்தியம் செய்து அழைத்து வந்து ஊர்கள் அளித்து பேணிக் காப்பாற்றப்பட்டனர். 
அவ்வம்சத்தில் வெள்ளோடு புலவன்பாளையப்புலவர்கள் இன்றும் வெள்ளோட்டில் வாழ்ந்து வருகின்றனர். வெள்ளோட்டு வாலசுப்புப்புலவனார் ஒருமுறை தெற்கத்திப்புலவரொருவருடன் வாதில் தோற்க, அவரை விஜயமங்கலம் தமிழ் சங்கப்புலவனாரான சாமிநாதப்புலவர் தெற்கத்திப்புலவரை வாதில் வென்று காப்பாற்றினார் என்பது இலக்கியச் செய்தி. இவ்வாறு சங்ககால முறை இன்று வரை கொங்கரால் பேணப்பட்டுவந்துள்ளது.  



சின்னுசாமி புலவனார் (இரத்தினாசலப் புலவனார் மகன், சாமிநாதப்புலவர்  பேரன்)
வெள்ளோட்டில் இன்றைய புலவனார் வாரிசு. இவர் ஓலப்பாளையத்தில் வசித்து வருகிறார். செல்: 9750552030

வெள்ளோடு தென்முகம் புலவர்கள்:

புலவர்கள் பூசை செய்யும் வெள்ளோடு ராசா கோயிலில் நடந்த வித்யாரம்பம் 


4. எழுமாத்தூர் நாட்டுப்புலவனார்கள்:
எழுமாத்தூர் அவலூர் புலவனார்கள் சென்னிமலை புலவனார் மகன்கள் ராம புலவனார், லட்சுமணப் புலவனார் ஆகியோர் கடைசியில் மொடக்குறிச்சி மஞ்சக்காட்டுவலசில் குடியிருந்தனர். மொடக்குறிச்சி ஹை ஸ்கூல் வாத்தியாராக இருந்தனர்.  

புலவனூர் புலவனார்கள்:
ஈங்கூர் அருகே புலவனூரில் புலவனார்கள் வசித்து வருகின்றனர். ஈஞ்ச கோத்திரத்தாரது ஆஸ்தான புலவனார்கள். இன்னும் தம்பிராட்டி அம்மனுக்கு ஊஞ்சல் பாட்டு பாடி வருகின்றனர்.

சென்னப்பநாயக்கம்பாளையம் புலவனார்:
மொடக்குறிச்சி அருகே சென்னப்பநாயக்கன்பாளையத்தில் ஒரே ஒரு குடும்பத்தினர் உள்ளனர்.

பெருந்துறைப் புலவனார்கள்:
பெருந்துறை அருகே நாற்பது குடும்பங்கள் உள்ளன

B. கீழக்கரை பூந்துறை நாடு (எழுகரை நாடு) புலவர்கள்:
1a . மோரூர் நாட்டுப்புலவர்கள் - ஆகவராம பட்டன்:
கருவேப்பம்பட்டியிலிருந்து தற்பொழுது தர்மபுரி நாய்க்கன்கொட்டாய் சென்று வாழ்கின்றனர். 
ஆனந்தன் புலவர்,
பழனிவேல் புலவர் தம்பி மகன்,
(தற்போது: கவுண்டம்பாளையம், மோரூர்)

1b . மொளசி நாட்டுப்புலவர்கள் - அன்னத்தியாக பட்டன்:
 சோழசிராமணியில் அங்காளம்மன் கோயில் எதிரில் உள்ளனர்.
                காசிவாசி அங்கமுத்து கூத்தாடிப்புலவர்   

தற்போதைய  கூத்தாடிப்புலவர் மரியாதை அளிக்கும் மொளசி நாட்டுக்கவுண்டர்  பழனிவேல்   


புலவருக்குப் பாரம்பரிய சங்ககால கொங்க முறைப்படி பால்பழம் வழங்கல் 



நாட்டு வாழிபாடல் பாடி வாழ்த்தும் அன்னதியாக பட்டன்

செல்: 7373325731

2A . பருத்திப்பள்ளி நாட்டுப்புலவர்கள்  - முதலிக்காமிண்ட பட்டன்:
வண்டிநத்தத்தில் இருந்தவர். தற்பொழுது:
குமாரசாமிப் புலவர்,
இளந்தோப்பு,
நெய்க்காரப்பட்டி,
சேலம்
என்ற விலாசத்தில் இருக்கிறார்கள். போன்: 8675979898
2a. மல்லசமுத்திர நாட்டுப்புலவர்கள்:
நாச்சிப்பட்டியில் உள்ளனர். போன்:  8870780109


நாட்டுக்கவுண்டர் குழந்தைக்கு எழுத்தாணிப்பால் (வித்தியாரம்பம்) செய்து வைக்கும் சபாபதி புலவர்  
போன்:  8870780109

3A. ஏழூர் நாட்டுப்புலவர்கள்: 
 கருமகவுண்டன்பட்டியிலிருந்து  தற்பொழுது சேலத்தில் உள்ளனர். பழனிப் புலவர் என்று பெயர். போன்: 
3a.  கலியாணி நாட்டுப்புலவர்கள்:

4. பொன் குலுக்கி நாட்டு (பொங்கலூர்) புலவனார்கள்

3. வேளராசி சமஸ்தான புலவர்கள் :

புலவன் வாக்கு என்றுமே பொய்க்காது !

அதற்க்கு சிறந்த உதாரணம்:

கம்பர் புலவனார் ஒரு முறை வேளராசி சமஸ்தான குழாயர் கோத்திரத்தை சேர்ந்த வேளராசி வாவிபாளையத்து  புலவர் ஒருவருக்கு பெண் பார்க்க வெள்ளகோவில் சென்று திரும்பும் போது குடவாயில்(கொடுவாய்) வழியாக புத்தரசன் கோட்டையை (புத்தரச்சல்) அடையும் போது மிகுந்த தாகம் எடுக்க, அங்கு உள்ள குழாயர் கோத்திரத்தாருக்கு உரிமையான ஸ்ரீ சோழீஸ்வரர் திருக்கோவிலில் உள்ளவரிடம் மோர் கேட்டு இருக்கிறார். அங்கிருந்தவர்கள் யாருமே மோர் கொடுக்காதாதால், கோபம் அடைந்த கம்பர், ஊருக்கு கிழக்கே உள்ள  விநாயகர் கோவிலில் அமர்ந்து,

"நெற்றிக்கண் திறவாயே, நிறைஞ்ச சோழீஸ்வரா.,
புத்தரச்சல் வேகாதோ, பொடிந்தணல் ஆகாதோ !
பாலும் கரைபார்த்து நதியெல்லாம், பத்திட்டால் ஆகாதோ !"

என்று அறம் பாட புத்தரச்சல் ஊரே எரிந்து சாம்பல் ஆனது.

பழைய புத்தரச்சல், சோழீஸ்வரர் கோவிலுக்கும், கரைக்கும் மேற்க்கே இருந்தது,
இன்றைய  புத்தரச்சல், சோழீஸ்வரர் கோவிலுக்கும், கரைக்கும் கிழக்கே உள்ளது.

100  கொங்கு புலவனார் குடும்பங்கள் வாழ்ந்த வேளராசி வாவிபாளையத்தில்
இன்று  வெறும் 7 குடும்பங்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
வேளராசி புலவனார்கள் பலர், எட்டிமடைக்கு குடி பெயர்ந்து விட்டார்கள்.


பழனிச்சாமி புலவனார் 

மாயவன் புலவனார்
9842672451


மங்கலிய நோம்பி பாடல் 

மண்ணுலகு தன்னிலே, மங்கிலிய நோம்பி என்றும், திருவாதிரை என்றும் மகமுநிவர்கள் உடைவன் ஒருவார்கள், ஒளித்தினும் மறைத்திருந்து, ஊரெல்லாம் அவரவர்கள் ஒரு சாந்தி விட்டுமே, உளாகிய பார்த்திருந்து வருனமணி மேகலக பட்டுடுத்தி, மைர்கோதி, எண்ணையிட்டு, வாகுடன், மன்னன் குமார ரத்தினம், மயிலை திருமலையாகியே !


ஒரு முறை புத்தரச்சல் குழாயர் கூட்டத்தை சேர்ந்த வெள்ளாளர் ஒருவர் குதிரையில் குண்டடம் சென்று உள்ளார். குதிரையில் இருந்து செருப்பு கீழே விழ, அந்த வழியில் சென்று கொண்டு இருந்த வாவிபாளையத்து புலவன் நாச்சிமுத்து என்பவரை, செருப்பை  எடுத்து போட்டு விடுமாறு  கூற,
எந்த ஊர் கவுண்டர் நீங்கள் என்று கேட்க, அவரோ குண்டடத்து ஒதாளன் கூட்டத்து கவுண்டன் என்று பொய் சொல்ல, 

கட்டு என்ன, மெட்டு என்ன செக்கொன்று பானைமேல்
புத்ரோகம் என்ன, ஊரெல்லாம் அவரவர்கள்
 தெரு வீதி வருவதென்ன, பட்டெங்கு சோமனில் 
சிரசெனும் பார்வை எங்கே? பல பல மெத்தை வீடு எங்கே?
 திமிரு புடி மீசை எங்கே? இந்த மௌனமது கங்கையில் ஆனதானங்கள் 
வண்டி மர்கொதி முடிவதென்ன, மாநிலம் தன்னிலே, 
மடையர்கள் ஏன் பிறந்தாய், வழதங்கை சீவகிரி ஆனதங்கே!

என்று பாடலாக பாட,

எப்படி இந்த புலவன், என்னை  குண்டடத்து ஒதாளன் கூட்டத்து  கவுண்டர் இல்லை என்று கண்டுபிடித்தான் என்று குழம்பி கொண்டே,

 குண்டடம் கிராமம் உண்டு, தலைவெட்டி சிப்பாய் உண்டு
கோயமுத்தூர் போவார் உண்டு, அச்சுகளி தின்பார் உண்டு, 
அதில் ஒரு சந்தேகமில்லை 
என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

13. அரைய நாட்டுப் புலவனார்கள்:

அரைய நாட்டுக்குப் புலவனார்கள் தலையநல்லூர் (சிவகிரி) கவுண்டம்பாளையத்தில் உள்ளனர். சேர குல உபாத்திகளில் (வாத்தியார்களில்) தலையநல்லூர் கூரை கோத்திரம் என்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இன்றைய வாரிசு பெரும்புலமைமிக்க  தமிழ்க்கடல் வேலுமணிப்புலவனார்.

அரையநாட்டு பெரும்புலவனார்களுக்கு அரச மானியமாக 256 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இன்று அந்நிலத்தின் ஒரு பகுதியில் தமிழ்காத்த பெரும் புலவர்களின் சமாதிக்கு முன் வாரிசு ’சந்தக்கவிமணி’ வேலுமணிப்புலவனார். புலவனார்களில் அண்மைகாலத்தின் பெரும்சீயமான நஞ்சைய புலவனாரது பேரன்.

சங்கத்தமிழ்காத்த கொங்க சேரகுல புலவனாரது பாரம்பரிய இலக்கிய ஓலைகளின் ஒரு சிறு (1/ 1000th) பகுதி.

முன்னோர் நஞ்சைய புலவனாரது புலமையின் ஒரு சிறு துளி

புலவனாரது தந்தையார்

ஒரு பழைய மாணவன் வாத்தியாருக்குக் கட்டிக்கொடுத்த வீடு
(மாணவன் - நல்லதம்பி சக்கரை மன்றாடி, வாத்தியார் - நரி வாத்தியார்)
வீட்டின்முன் இன்றைய வாரிசு


விலாசம்:
52, கவுண்டம்பாளையம்,
அம்மன்கோயில் (அஞ்சல்),
சிவகிரி (வழி) - 638 109,
ஈரோடு.

இவரது போன்: 04204 - 240287

Monday, March 14, 2011

21. ராசிபுர நாட்டுப் புலவனார்கள்:

1. ராசிபுர நாட்டுப்புலவர்கள் -  அகளங்க  பட்டன்:
ஒடுவங்குறிச்சியில் உள்ளனர்  

1A . சேல நாட்டுப்புலவர்:
நாச்சிப்பட்டியில் உள்ளனர்


நாட்டுக்கவுண்டர் குழந்தைக்கு எழுத்தாணிப்பால் (வித்தியாரம்பம்) செய்து வைக்கும் சபாபதி புலவர்  


போன்:  8870780109



Sunday, March 13, 2011

22. காஞ்சிகோயில் நாட்டுப் புலவனார்கள்:

காஞ்சிக்கோயில் புலவர்பாளையத்தில் சில குடும்பங்கள் உள்ளன.  சென்னிமலைப்புலவனார் வம்சம். பூந்துறைநாட்டிலிருந்து வந்தவர்கள்.

தெய்வசிகாமணிப்புலவனார் மகன் சென்னிமலைப்புலவனார், இவரது வாரிசுகள் புலவர்பாளையத்தில் உள்ளனர். இன்றும் காஞ்சிக்கோயில் நாட்டின் பிரதான தெய்வமான சீதேவி அம்மன் கோயிலில் ஊஞ்சல் பாட்டு பாடி வருகின்றனர்.

காஞ்சிகோயில் நாட்டு ஆஸ்தான புலவனார்
போன்: 9894851620
 காஞ்சிகோயில் புலவர்பாளையம்



கவுந்தப்பாடி பகுதியில் சிலர் உள்ளனர்.


கவுந்தப்பாடி ஐயன்வலசு, புலவக்காளிபாளையம் மற்றும் பிற ஊர்களிலும் சில குடும்பங்கள் உள்ளன.


விரியும்.....

Monday, February 21, 2011

எழுத்தாணிப்பால் வித்தியாரம்பம்

விஜயதசமியன்று தங்கள் காணி கொங்கப்புலவனாரிடம் குழந்தைகளை அழைத்துச் சென்று வித்யாரம்பம் செய்வது கொங்க வெள்ளாள கவுண்டர்களின் பாரம்பரிய மரபு. கல்விகற்றலின் துவக்கம் வித்யாரமப்ம். சரஸ்வதி தேவியின் பூரண அருள்பெற்ற, வாக்குப்பலிதம் உள்ள  கொங்கப்புலவனார்கள் மூலம் வித்யாரம்பம் செய்வதால் அறிவுக்கண் துலங்கும். கொங்கப் பசுவின் பாலில் (தம்ளரில்) எழுத்தாணி கொண்டு ஓம் அல்லது 'அ' எழுதி அதை குழந்தைக்கு குடிக்கக் கொடுப்பார்கள். இதை எழுத்தாணி பால் கொடுப்பது என்பார்கள். உயிரின் இயக்கத்துக்கு தாய்ப்பால் எப்படியோ அதுபோல ஞானசக்தி எழுத்தாணிப்பால் மூலம் வளம்பெறும். 

2022 மல்லசமுத்திரம் செல்லாண்டியம்மன் கோயிலில் வெளியன் குல மல்லை நாட்டுப் புலவருடன் விஜயதசமி எழுத்தாணிப்பால் வித்தியாரம்பத்தில் மல்லை நாட்டுக்குலகுருவான அய்யம்பாளையம் மடாதிபதி



மல்லசமுத்திரம் நாட்டு புலவர் எழுத்தாணிப்பால் வித்தியாரம்பம் கீழே






2023 பத்திரிக்கை:



வெள்ளோடு ராசா கோயிலில் நடந்த வித்யாரம்பம் சடங்கின் படங்கள் கீழே.







Sunday, February 20, 2011

புலவனார் வாழ்த்து

கொங்க வெள்ளாள கவுண்டர்கள் கலியாணத்தில் கொங்கப்புலவனார்களால் பாடப்படும் புலவனார் வாழ்த்து எனப்படும் கம்பர் வாழி. (இது புலவர் ராசு அவர்களின் புத்தகத்தில் இருந்து எடுத்த பக்கங்கள்.