Tuesday, March 22, 2011

4. பொன் குலுக்கி நாட்டு (பொங்கலூர்) புலவனார்கள்

3. வேளராசி சமஸ்தான புலவர்கள் :

புலவன் வாக்கு என்றுமே பொய்க்காது !

அதற்க்கு சிறந்த உதாரணம்:

கம்பர் புலவனார் ஒரு முறை வேளராசி சமஸ்தான குழாயர் கோத்திரத்தை சேர்ந்த வேளராசி வாவிபாளையத்து  புலவர் ஒருவருக்கு பெண் பார்க்க வெள்ளகோவில் சென்று திரும்பும் போது குடவாயில்(கொடுவாய்) வழியாக புத்தரசன் கோட்டையை (புத்தரச்சல்) அடையும் போது மிகுந்த தாகம் எடுக்க, அங்கு உள்ள குழாயர் கோத்திரத்தாருக்கு உரிமையான ஸ்ரீ சோழீஸ்வரர் திருக்கோவிலில் உள்ளவரிடம் மோர் கேட்டு இருக்கிறார். அங்கிருந்தவர்கள் யாருமே மோர் கொடுக்காதாதால், கோபம் அடைந்த கம்பர், ஊருக்கு கிழக்கே உள்ள  விநாயகர் கோவிலில் அமர்ந்து,

"நெற்றிக்கண் திறவாயே, நிறைஞ்ச சோழீஸ்வரா.,
புத்தரச்சல் வேகாதோ, பொடிந்தணல் ஆகாதோ !
பாலும் கரைபார்த்து நதியெல்லாம், பத்திட்டால் ஆகாதோ !"

என்று அறம் பாட புத்தரச்சல் ஊரே எரிந்து சாம்பல் ஆனது.

பழைய புத்தரச்சல், சோழீஸ்வரர் கோவிலுக்கும், கரைக்கும் மேற்க்கே இருந்தது,
இன்றைய  புத்தரச்சல், சோழீஸ்வரர் கோவிலுக்கும், கரைக்கும் கிழக்கே உள்ளது.

100  கொங்கு புலவனார் குடும்பங்கள் வாழ்ந்த வேளராசி வாவிபாளையத்தில்
இன்று  வெறும் 7 குடும்பங்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
வேளராசி புலவனார்கள் பலர், எட்டிமடைக்கு குடி பெயர்ந்து விட்டார்கள்.


பழனிச்சாமி புலவனார் 

மாயவன் புலவனார்
9842672451


மங்கலிய நோம்பி பாடல் 

மண்ணுலகு தன்னிலே, மங்கிலிய நோம்பி என்றும், திருவாதிரை என்றும் மகமுநிவர்கள் உடைவன் ஒருவார்கள், ஒளித்தினும் மறைத்திருந்து, ஊரெல்லாம் அவரவர்கள் ஒரு சாந்தி விட்டுமே, உளாகிய பார்த்திருந்து வருனமணி மேகலக பட்டுடுத்தி, மைர்கோதி, எண்ணையிட்டு, வாகுடன், மன்னன் குமார ரத்தினம், மயிலை திருமலையாகியே !


ஒரு முறை புத்தரச்சல் குழாயர் கூட்டத்தை சேர்ந்த வெள்ளாளர் ஒருவர் குதிரையில் குண்டடம் சென்று உள்ளார். குதிரையில் இருந்து செருப்பு கீழே விழ, அந்த வழியில் சென்று கொண்டு இருந்த வாவிபாளையத்து புலவன் நாச்சிமுத்து என்பவரை, செருப்பை  எடுத்து போட்டு விடுமாறு  கூற,
எந்த ஊர் கவுண்டர் நீங்கள் என்று கேட்க, அவரோ குண்டடத்து ஒதாளன் கூட்டத்து கவுண்டன் என்று பொய் சொல்ல, 

கட்டு என்ன, மெட்டு என்ன செக்கொன்று பானைமேல்
புத்ரோகம் என்ன, ஊரெல்லாம் அவரவர்கள்
 தெரு வீதி வருவதென்ன, பட்டெங்கு சோமனில் 
சிரசெனும் பார்வை எங்கே? பல பல மெத்தை வீடு எங்கே?
 திமிரு புடி மீசை எங்கே? இந்த மௌனமது கங்கையில் ஆனதானங்கள் 
வண்டி மர்கொதி முடிவதென்ன, மாநிலம் தன்னிலே, 
மடையர்கள் ஏன் பிறந்தாய், வழதங்கை சீவகிரி ஆனதங்கே!

என்று பாடலாக பாட,

எப்படி இந்த புலவன், என்னை  குண்டடத்து ஒதாளன் கூட்டத்து  கவுண்டர் இல்லை என்று கண்டுபிடித்தான் என்று குழம்பி கொண்டே,

 குண்டடம் கிராமம் உண்டு, தலைவெட்டி சிப்பாய் உண்டு
கோயமுத்தூர் போவார் உண்டு, அச்சுகளி தின்பார் உண்டு, 
அதில் ஒரு சந்தேகமில்லை 
என்று கூறிவிட்டு கிளம்பி விட்டார்.

2 comments: